Edison Tube
Welcome
Login / Register

Latest Articles


 • புலிகளுக்கு எதிரான யுத்தம்: இலங்கைக்கு 80% பயிற்சி அளித்தது இந்தியாவே.. சொல்வது கோத்தபாய

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

  கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில ஏட்டுக்கு கோத்தபாய ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

   

  புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கின. அப்போது இந்தியாவோ இலங்கை ராணுவத்தினருக்கு மிக முக்கியமான பயிற்சிகளை வழங்கியது.

  பல ஆண்டுகளாக இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சிகளை வழங்கியது. தமிழகத்தின் நெருக்கடியால் இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்க முடியவில்லை.

  இருப்பினும் எங்களது ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தது இந்தியா. சீனாவின் ஆயுதங்களைத்தான் நாங்கள் பிரதானமாக பயன்படுத்தினோம். சீனாவையே நாங்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தோம்.

  இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

  Read more »
 • ரசிகநெஞ்சங்களும், நம்பிக்கை வாக்கெடுப்பும்

  மக்கள் கலைத்துறை சார்ந்தவர்கள் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகமிக அதிகம். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும்விட கூடுதலானது அது. இரண்டும் ஒன்றல்ல. கலைத்துறையில் உள்ளவர்கள் தோல்வி அடைந்தால்கூட அவர்கள் மீதுள்ள மக்களின் நேசம் மாறுவதில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தோல்வி அடைந்தால் அது ஆட்சி தோல்வி மட்டுமல்ல. அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் கொடுக்கும் தண்டனை. அதனாலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களில் மக்களுக்கு அவர்கள்மீது வெறுப்பு முளைக்கிறது. அங்கு உருவாகும் வெறுப்பு நாட்டுநலன் சார்ந்தது.

  கலைத்துறைக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் பொதுவாக நல்ல உறவு இருப்பதில்லை. உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை கவனித்தவர்களுக்கு இதன் பல்வேறு போக்குகள் நிச்சயம் பிடிபடும். சார்லி சாப்ளின் ஒரு சிறந்த திரைக்கலைஞர். அவர், ஹிட்லரை விமர்சனம் செய்தாரே தவிர ஹிட்லரை அல்லது ஹிட்லர் போன்ற அதிகாரம் உள்ள ஒருவரை பதவியிறக்கம் செய்துவிட்டு அந்த இருக்கையில் தான்போய் அதில் அமரவேண்டுமென எப்போதும் நினைத்ததில்லை.

  ரஷ்ய நாவலாசிரியர் போரீஸ் பட்டர்நாக் ஒரு நாவலை எழுதினார். 'டாக்டர் ஷிவாகோ' என்ற அந்த நாவல் ரஷ்ய புரட்சியை விமர்சித்து எழுதப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார். ரஷ்ய புரட்சியின் பக்க விளைவாக நேர்ந்த இழப்புகளை அந்நாவல் வெளிப்படுத்தியது. பெங்களூருவில் 1989-ல் வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹஸ்மி நாடகம் நடத்திக்கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார். இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து தனது நாளிதழில் இலங்கை அரசை எதிர்த்து தலையங்கம் தீட்டிய சிங்களக் கவிஞரும் சண்டே டைம்ஸ் ஆசிரியருமான லசந்தா விக்ரமதுங்கா கொலைசெய்யப்பட்டார். எழுத்து, இலக்கியம், கலை எப்போதும் அரசுக்கு நேர் எதிரானதாக அமைந்ததற்கு பொறுப்பு பொறுப்பற்ற அரசாங்கங்களே.

  ஆனால் தமிழகத்தில் தொடர்ந்துபோய்க்கொண்டிருக்கும் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது.

  கடந்த 40 வருட தமிழக வரலாறு, உலக வரலாற்றின் தெளிவுடன் முற்றிலும் மாறுபடுகிறது. தமிழகத்தில் கலைத்துறை சார்ந்தவர்களே ஆட்சியதிகாரத்தை ஏற்றிருந்தது ஒரு காரணம். ஆந்திரத்தில் என்டிஆர், இலங்கையில் மாலினி பொன்சேகா, விஜய குமாரணதுங்க உள்ளிட்டவர்களும், அமெரிக்காவில் ரோனால்ட் ரீகன் போன்றவர்களும் தமிழகத்தைப் போல வேறு எவரையும் நிரந்தரமாக ஆட்சியதிகாரத்திற்குள் வரவிடாத (எளிமையான சி.என்.அண்ணாதுரை விதிவிலக்குத் தவிர) எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முடிசூடா மன்னர்களல்ல. இதனால் கலைத்துறை மீதுள்ள அதீத நேசத்தினால் கலைத்துறை சார்ந்தவர்களின் பொறுப்பிலிருந்த ஆட்சியதிகாரத்தை அதன் நுணுக்கங்களை, நுணுக்கமான மோசடிகளை கண்டுகொள்ளாமலே கடந்த 40 ஆண்டுகளை தமிழக மக்கள் கடந்துவந்துவிட்டனர்.

  இப்போதாவது நிலை மாறிவிட்டது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. கலை வேறு ஆட்சியதிகாரம் வேறு என்பதை உணரத் தொடங்கிள்ளனரா என்பதும் தெளிவாகவில்லை. கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களை மக்கள் ஒருபோதும் தங்கள் ஆட்சியதிகாரத்தின் தலைவராக ஏற்கமாட்டார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.

  திரைக்கலைஞர்கள் மீது வைத்துள்ள உண்மையான அன்பும் மரியாதைக்கும் அத்தாட்சியாக அதை தேர்தல் அதிகாரத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டியது அல்ல என்பதை தமிழக மக்கள் ஏனோ யோசிப்பதே யில்லை. அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டால் பல மறைமுக இழப்புகளை நாடு ஏற்றுக்கொள்ளவேண்டும். பல்வேறு சிக்கல்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள அரசியல் அதிகாரம் பெற்ற திரைக்கலைஞர்கள் தயாராக இருக்கமாட்டார்கள். வழிபாட்டு அபிஷேகத்தில் அவர்களின் திளைப்பு கண்களை மறைத்துவிடும். அவர்களால் நேரும் பல்வேறு சிக்கல்களையும் மாநில மக்கள் பொறுத்துச்செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

  நம் காதுபட விழும் பல விஷயங்கள் மிரள வைக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக பொறுப்பேற்ற திரைத்துறை சார்ந்த தலைவர்கள் ஆட்சியதிகாரத்தின் பின்னணியில் உள்ள குடும்ப சொத்துக் கணக்குகள் பற்றியது அது.

  அவர்கள் சேர்த்துவைத்துள்ள சொத்துக்கணக்குகளில் உள்ள பண மதிப்பு லட்சமோ கோடியோ அல்லது அளவற்ற லட்சம் கோடிகள் என்று கூறுவதைக் கேட்டு ஆசைஆசையாய் ஓட்டுபோட்ட சாமான்யனின் தலை கிறுகிறுவென சுற்றக் கூடும். சாதாரண கலைஞர்களாக, ஏழைப் பங்காளர்களாக திரைத்துறையில் பணியாற்றி அரசியலில் நுழைந்து அவர்கள் அடித்த கொள்ளை அது என்பதை அவன் எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான். இது ஒருபுறம்.

  தற்போதைய தமிழக பிரச்சனைகளுக்கு வருவோம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான தமிழகத்தின் காட்சிகள் ஒன்றுகூட ரசிக்கும்படியாக இல்லை.

  அத்தகைய காட்சிகள் திடீரென உருவானதல்ல. கடந்த 40 வருடங்களாக மக்களின் மயக்கம் திடீரென கலைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சிநிலைப் படிமங்களே அவை. நாடே பார்த்துக்கொண்டிருக்க கூவத்தூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக சொகுசு ஓட்டலில் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா அன்ட் கோவுக்கு சாதகமான நம்பிக்கை வாக்களிக்க வேண்டுமென அடைத்து வைக்கப்பட்டிருந்ததை எப்படி பார்ப்பது என்றே இந்த நிமிடம் வரை கூட யாராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

  சென்றவாரம் 'நம்பிக்கை வாக்கெடுப்பு'க்காக கூடிய சட்டமன்றத்தில் அமளி துமளிகள் குளறுபடிகள் நிகழ்ந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு சென்று மக்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு வந்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையைக்கூட பேரவைத் தலைவர் விதிக்கவில்லை.

  இதனை எதிர்க்கட்சிகளும் மற்றும் எதிர் அணியினரின் கோரிக்கைகளாக வைத்தும் அவை நிராகரிக்கப்பட்டன. எந்தவித வெளிஉலக ஜனநாயகக் காற்றை சுவாசிக்காத நிலையில் மக்கள் கருத்துக்கள் என்னவென்றே அறியாதவர்களாய் கூவத்தூர் சொகுசு ஓட்டலில் இருந்து மயக்கம் தெளியாதவர்களாய் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில்தான் ஆளும் அதிமுக கட்சியின் 100க்கும் மேற்பட்ட பேரவை உறுப்பினர்கள் இருந்தனர்.

  பெரும்பான்மையான அந்த உறுப்பினர்களின் வெளிஉலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுபோல பத்திரமாக அழைத்துவரப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சசிகலா தரப்பு ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே 'நம்பிக்கை வாக்கெடுப்பு' நடத்தப்பட்டது. ஆளும் அதிமுக கட்சியின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இதை மக்களாட்சி என்ற பெயரில் நடந்த மாபெரும் முறைகேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தை பீடித்த 40 ஆண்டுகாலமாக நீளும் நோயின் தொடர்ச்சி இது.

  கலைத்தாயின் செல்லப்பிள்ளைகளின், ரசிக நெஞ்சங்களின் ஆட்சியில்தான் இவையெல்லாம் நடக்கின்றன.

  திரைக்கலைஞர்களின் அரசாட்சியில்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் நடந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள், கூடங்குளம், டாஸ்மாக், மெரினா போராட்டங்கள் போன்றவை கடும் தாக்குதல்களோடு முடக்கப்பட்ட சம்பவங்கள், இவற்றின் தொடர்ச்சியாகவே மேற்சொன்ன சட்டமன்ற கூவத்தூர் அன் கோவின் நம்பிக்கை வாக்கெடுப்பும் நிறைவேறியது.

  சாமான்யன் என்ற நிலையைக் கடந்து ரசிகன் என்ற நிலையிலிருந்து மக்கள் ஆட்சிப் பங்கெடுப்பில் நேரும் சிக்கலில் உருவாகும் அதிர்ச்சி நிலை இது. அரசியல் போராட்டங்கள் என்றால் என்னவென்றெ தெரியாத இன்னமும் நீடிக்கும் தமிழகத்தின் மயக்கநிலையுமாகும். தமிழகம் உடனடியாக இந்த அதிர்ச்சிநிலையிலிருந்து விடுபட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களித்த சாதாரண குடிமகனின் விருப்பங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள இடைவெளி மலையளவு கடலலளவு மாறிப்போன ஆபத்திலிருந்து தப்பிக்கவேண்டிய விழிப்புநிலை பெற வேண்டும்.

  ஆட்சியதிகாரத்தின் எத்தகைய துஷ்பிரயோகத்தையும், தவறு செய்தால் எந்த முகத்தாட்சண்முயமும் இல்லாமல் அவர்களைத் தூக்கியெறிவதற்கு பெரிய சாகச துணிச்சல்கள் தேவை என்ற நிலையெல்லாம் குடியரசு நாட்டில் உருவாகக் கூடாது.

  அதெல்லாம் மிகவும் சர்வ சாதாரண காரியங்களாக நடந்தேற வேண்டியவை. ஆனால் இங்கு இப்போது அதுவே குதிரைக்கொம்பாகி உள்ளது. கட்அவுட் அபிஷேக திரையில் காணும் போலி சாகச அரிதார கலை மயக்கங்களிலிருந்து விழிக்கவேண்டும். தமிழக வாழ்வாதார பிரச்சனைகளோடு தீவிரமாக இயங்குபவர்களால் மட்டுமே மக்கள் நலன் சார்ந்த ஆட்சியதிகாரம் இனி சா

   

  Read more »
 • இப்படிக்கு இவர்கள்: நாளொரு காட்சி.. பொழுதொரு அவலம்!

  தமிழகத்தில் தொடரும் அவலங்கள் மக்களுக்கு மிகப்பெரிய தலைக்குனிவையே ஏற்படுத்தியிருக்கிறது.

   

  அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.

  சுயமதிப்பீடுகளின் அடிப்படையிலும் சுயலாபங்களின் கணக்கீடுகளிலும் மட்டுமே கவனம் செலுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளை இத்தனை நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கலாமா?

  ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ கட்சியின் லாபத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதற்காக மக்களையும் சட்டத்தையும்கூட வளைக்கலாமா?

  இவை வேதனைக்குரியவை மாத்திரமல்ல.. வருத்தத்துக்குரியதுமாகும். தமிழக சட்டமன்ற சபாநாயகர் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியினர் - ஓபிஎஸ் தரப்பினர் வேறுவிதமாகவும் அறிக்கைகளை வெளியிட்டு, தங்கள் தரப்பு நியாயத்தை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இத்தகைய அவல நிலைக்குக் காரணம் யார் என்று ஆராயவோ, அதை உணர்ந்து சரிசெய்துகொள்வதற்கோ யாருக்கும் நேரமில்லை என்பது இன்னும் கவலைக்குரிய விஷயம்.

  - டி.பாபு தாமஸ், மின்னஞ்சல் வழியாக.

   

  காலத்தின் கட்டாயம்

  அரவிந்தனின் ‘மக்கள் கருத்துக்கு என்ன மரியாதை’ என்ற கட்டுரை நன்று. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலை கட்டுரையில் தெளிவாகப் படம்பிடித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முடிவு எடுக்கும் முன் அனைத்து அரசியல் கட்சிகளும் நம் நாட்டில் இப்போது உள்ள ஊடக வளா்ச்சியை, சமூக வலைதளங்களை தங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

  - சிவகுமார், கோயம்புத்தூர்.

   

  Read more »
 • அதான் பொன்மனச் செம்மலின் மனசு!

  மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு இது.

  ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், அருகே அமைச்சர் நெடுஞ்செழியன்...

  இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி.

  முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.

  இப்போது ராதா அவர்கள் விருது வாங்கச் செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச் செய்கிறார்.

  ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிகுந்த ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி.

  மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்துது இன்னும் அதிர்ச்சி ராதாவுக்கு.

  ராதா ஏதோ சொல்லமுயலும் போது, அவரைத் தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது.

  "நான் ஆரம்பக் காலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும், தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி, இருக்க இடம், உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்தீர்கள்.

  நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும். தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும்," என்று சொன்னதுதான் தாமதம், எம்கே ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின...

  ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து எம்கே ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்த பொன்மனச் செம்மலைப் புகழ வார்த்தைகள்தான் ஏது?

  (தகவல்: எம்கே ராதாவின் மகன் டாக்டர் சுகுமார் ராதா.. பகிர்ந்தவர்: என்எஸ்கே நல்லதம்பி)

  Read more »
 • பிஎப் பணத்தை இணையம் மூலம் நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்! கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

  ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.

  இந்தச் சேவையை பயன்படுத்துவது பயனர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல என்ற போதிலும் வேகமாக பிஎப் பெறுதல் முறைகளைப் பின்பற்ற முடியும் என்று கூறப்படுகின்றது.

  இதற்காக அனைத்துக் கிளை அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி நடந்து வருவது என்றும், இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்த உடன் இணையத்தில் சமர்ப்பிக்கக் கூடிய பிஎப் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் அதைப் பயன்படுத்தி எளிதாக பணத்தை திரும்பப் பெற இயலும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

  இணையம் மூலம் சில மணி நேரத்தில் எடுக்கக் கூடிய பிஎப் முறையில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம்.

  1 கோடி விண்ணப்பம்

  ஓய்வூதிய நிதி ஆணையம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது 1 கோடி விண்ணப்பங்கள் வரை திரும்பப் பெறும் கோரிக்கைக்காக மட்டும் சமர்ப்பிக்கப்படுகின்றது.

  சில மணி நேரத்தில் பிஎப் பணம்

  ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையம் மூலம் செயல்படும் போது சில மணி நேரங்களில் வங்கி பரிவத்தனைகள் பொன்று விண்ணப்பித்த விண்ணப்பித்த அன்றே கிடைக்கும்.

  தற்போதைய குறைந்தபட்ச நாட்கள்

  நாட்கள் பிஎப் அலுவலகங்களில் இப்போது பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெறும் போது குறைந்தது 20 நாட்களுக்குள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

  50 துறை அலுவலகங்களில் பைலட் திட்டம் மூலம் ஏற்கனவே பிஎப் அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதம் உள்ள 123 அலுவலகங்களை மத்திய சர்வருடன் இணைக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.

  ஆதார் அவசியம்

  ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதற்காக அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறுகின்றது. இதனால் பிஎப் சந்தாதார்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைத்தல் வேண்டும்.

  ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு

  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மட்டும் இல்லாமல் வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த முறை எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

  வரி விலக்கு

  நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை.

  இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை.

  5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..?

  ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும்

  பிரிவு 80 சி

  பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.

  டிடிஎஸ்(TDS)

  தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.

  இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

  படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

  Read more »
RSS